/உள்ளூர் செய்திகள்/சென்னை/பெண் கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி சிக்கினார் : போலீஸ் விசாரணையில் கொலையாளி நகையுடன் கைதுபெண் கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி சிக்கினார் : போலீஸ் விசாரணையில் கொலையாளி நகையுடன் கைது
பெண் கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி சிக்கினார் : போலீஸ் விசாரணையில் கொலையாளி நகையுடன் கைது
பெண் கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி சிக்கினார் : போலீஸ் விசாரணையில் கொலையாளி நகையுடன் கைது
பெண் கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி சிக்கினார் : போலீஸ் விசாரணையில் கொலையாளி நகையுடன் கைது

பரங்கிமலை: பல்லாவரம் பெண் கொலை வழக்கில் உறவினரான கொலையாளியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜமீன் பல்லாவரம், பச்சையம்மன் நகர், வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் முருகதாஸ்(35). இவர், கத்தாரில் கட்டட மேற்பார்வையாளராக பணிபுரிகிறார். இவரது மனைவி இந்திரா(31). இவர்களுக்கு கிஷோர்(9) ஹனின்(4) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். வீட்டில் தனியாக இருந்த இந்திரா, கடந்த 19ம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த ஏழரை சவரன் தாலி சரடு மாயமாகி இருந்தது. பக்கத்து வீட்டில் வசிக்கும் மாணிக்கம் மனைவி ஜெயசீலி கொடுத்த புகாரின்படி பல்லாவரம் போலீசார் விசாரித்து வந்தனர். இதையடுத்து, புறநகர் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவுப்படி, பரங்கிமலை துணை கமிஷனர் வரதராஜு மேற்பார்வையில், மீனம்பாக்கம் உதவி கமிஷனர் குப்புசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், சிவராஜன், எஸ்.ஐ.,க்கள் வெங்கடேசன், ஆல்பின்ராஜ், ரத்னசாமி, சசிகலா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தடயங்கள் எதுவுமே இல்லாத இந்த கொலை வழக்கில், தனிப்படை போலீசார் திறமையாக செயல்பட்டு, கொலை செய்யப்பட்ட இந்திராவின் நெருங்கிய உறவினரான பன்னீர்செல்வத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தாலிச் சரடு பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு குறித்து புறநகர் கமிஷனர் ஜாங்கிட் கூறியதாவது: கொலையாளி பன்னீர்செல்வம், இந்திராவிற்கு தூரத்து உறவினர். புதிய வீடு ஒன்றை இந்திரா கட்டி வருகிறார். இதற்கு, அடிக்கடி இந்திரா வீட்டிற்கு வந்து சென்ற, பன்னீர்செல்வம் உதவினார். மேலும், தேவைக்காக பன்னீர்செல்வத்திடம் அவ்வப்போது, இந்திரா கடன் வாங்கி வந்தார். இந்நிலையில், பன்னீர்செல்வம் தனது மனைவி ஜெயாவின் நகைகளை அடகு கடையில் வைத்து, கடன் வாங்கினார். அந்த நகையை திருப்புவதற்காக இந்திராவிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டார். ஆனால், இந்திரா மறுத்துவிட்டார்.
இந்நிலையில், இந்திராவின் பெற்றோர் மற்றும் பன்னீர்செல்வத்தின் மனைவி, குழந்தைகள் ஊருக்கு சென்றிருந்தனர். கடந்த 19ம் தேதி இந்திராவின் வீட்டுக்கு சென்ற பன்னீர்செல்வம், "உன் வீட்டை சுற்றி திருடர்கள் நடமாட்டம் உள்ளது' என்றார். அதற்கு,"அப்படி யாரும் இங்கு வரவில்லை; இந்த இரவு நேரத்தில் இங்கு நீ வர வேண்டாம். சென்றுவிடு' என்று கூறிய இந்திரா, காம்பவுண்டு சுவரின் கிரில் கேட்டை திறக்க சாவி எடுத்து வந்து, கிரில் கேட்டை திறக்க முயன்றார். அப்போது பின்புறமாக வந்த பன்னீர்செல்வம், இரும்பு கம்பியால் இந்திராவை தாக்கினார். இதில், இந்திரா சரிந்து விழுந்து, இறந்தார். போலீசாரிடம் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக ரத்தம் சிந்திய இடங்களை சுற்றி மிளகாய்ப் பொடியை தூவிய பன்னீர்செல்வம், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால், விசாரணையில் தடயம் கிடைக்கவில்லை. இந்திராவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றவர்களை கண்டறிந்து, அவர்களிடம் தீவிரமாக விசாரித்தோம். இதில், பன்னீர்செல்வம் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். தொடர் விசாரணையில், இந்திராவை கொலை செய்ததை பன்னீர்செல்வம் ஒப்புக் கொண்டார். அவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மீட்கப்பட்டது. இவ்வாறு ஜாங்கிட் கூறினார்.